வெளிநாட்டில் இந்தியரை கோடீஸ்வரராக மாற்றிய அதிர்ஷ்டம்! லொட்டரியில் அ டி த்த மிகப் பெரிய ஜாக்பாட்!!

279

ஐக்கிய அரபு………..

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் பிக் டிக்கெட் கு லுக்கல் மூலம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு மேல் வென்றுள்ளார்.

இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த Dipankar Dey என்ற 37 வயது நபர், ஐக்கியர் அரபு அமீரகத்தில் 9 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற Big Ticket Abu Dhabi குலுக்கலில் இவர் 12 மில்லியன் திர்ஹாம், இந்திய மதிப்பில் சுமார் 24,56,33,586 கோடி ரூபாய் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவர், இந்த தொகையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 11 பேருடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திர்ஹாம்களை பெறப்போவதால், அவர்கள் அனைவரும் பரிசு வென்றதில் மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர்.

துபாய் நிறுவனம் ஒன்று optometrist-ஆக வேலை பார்க்கும், இவர் 9,000 திர்ஹாம் சம்பளமாக பெற்று வருகிறார்.

உண்மையிலே இது எனக்கு ஒரு பெரிய செய்தி, ஆச்சரியமாக இருக்கிறது. இந்த பணம் என்னுடைய மூன்று வயது மகளின் கல்விக்கு பயன்படும். அதே நேரத்தில் எனது குடும்ப எதிர்காலத்திற்கான சேமிப்பில் இருந்த பணம் இருக்கும்.

சில தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும். முக்கியமாக இந்த தருண நான் என் குடும்பத்தினருடன் இருக்க விரும்புகிறேன்.

ஆனால் என் மனைவி மற்றும் மகள் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா சென்றனர். அவர்களால் திரும்பி வர முடியவில்லை, இருப்பினும் இந்த செய்தியின் மூலம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 14-ஆம் திகதி இவர் வாங்கிய டிக்கெட் எண், 041486 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.