வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு கணவன் அனுப்பிய சிறுமியின் புகைப்படம் : அதிர்ச்சியில் உறைந்து போன மனைவி!!

557

தஞ்சாவூர்…

வெளிநாட்டில் வசிக்கும் மனைவிக்கு சிறுமியை கொ.லை செ.ய்த புகைப்படத்தை கணவன் அனுப்பிய சம்பவத்தின் அ.திர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் ரங்கேஸ்வரன் – விஜயலட்சுமி தம்பதி. இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ் (4). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் ரங்கேஸ்வரன் இறந்துள்ளார்.

இந்நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்த விஜயலெட்சுமிக்கு, அண்ணன் முறைகொண்ட அவரது உறவினர் வெற்றிவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது தவறான உறவாக மாறியதால் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புக்கு இடையூறாக இருந்த விஜயலட்சுமியின் ஏழு வயது மகள் வித்யாவை வெற்றிவேல் தா.க்.கியதாக கூறப்படுகிறது.

இதில் சம்பவ இடத்திலே சிறுமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை இருவரும் சேர்ந்து புதைக்க முயன்ற போது அது தோல்வியடைந்தது. இதையடுத்து சடலத்தை ஆற்றில் தூக்கி வீசியுள்ளனர்.

மேலும் வித்யாவின் புகைப்படத்தை வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு வெற்றிவேல் குடிபோதையில் அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியில் சில நிமிடங்கள் சிலையாக நின்ற மனைவி பின்னர் சுதாரித்து கொண்டு தஞ்சையில் உள்ள உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, விஜயலெட்சுமி மற்றும் வெற்றிவேல் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட வித்யாவின் உடலை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.