வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… பாகுபலி பாணியில் காப்பாற்றப்பட்ட பச்சிளம் குழந்தை! கலங்கடிக்கும் காட்சி!

759

பெங்களூருவில்….

நேற்று முன் தினம் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஒசகெரேஹெள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் காற்றில் மிதக்கின்றன. இந்த வெள்ளநீரில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை பத்திரமாக மீ ட்கப்பட்டது.

பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இரவில் பெய்யும் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை முதலே பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாலை 5 மணி அளவில் கருமேகங்கள் ஒன்றுகூடி மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல வெ ளுத்து வா ங்கியது. குறிப்பாக மைசூரு சாலை, ஒசகெரேஹள்ளி, கோரமங்களா, பீனியா, பனசங்கரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

இரவு முழுவதும் விடாமல் பெய்த கனமழை கொ ட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிக்குள் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒசகெரேஹள்ளி பகுதியில் ஓடும் ராஜகால்வாயில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது.