வேப்பிலையை வைத்து கொ டிய சர்க்கரை நோயை எப்படி விரட்டியடிக்கலாம்?

483

நீரிழிவு நோய்……

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஏற்படும் இ ற ப்புகளில் 1.6 மில்லியன் இறப்புகளுக்கு நேரடி காரணம் நீரிழிவு நோய் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது.

மேலும் 2030ம் ஆண்டு, உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் ஏழாவது இடத்தை நீரிழிவு நோய் பிடிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. நீரிழிவு நோய் ஒரு நாட்பட்ட மற்றும் வளர்சிதை மாற்ற நோய். இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது இந்த பாதிப்பு உண்டாகிறது.

இதற்கான சரியான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய், கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகிறது. நீரிழிவு பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது மற்றும் நோய் கண்டறிதல் தாமதமாக உண்டாகும் போது அதனை நிர்வகிக்க முடியாத நிலைமை உண்டாகிறது.

நீரிழவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் கொள்வது அவசியம். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள், ட்ரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

உயர் நார்ச்சத்து உணவு, கார்போ மற்றும் புரத உணவுகள் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுகளாகும்.

வேப்பிலை
நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் பல உணவுகள் மற்றும் மூலிகைகள் உதவியாக உள்ளன. உதாரணமாக வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

மேலும் வேப்பிலை என்னும் மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

இந்திய முழுவதும் வளரும் ஒரு மூலிகை வேப்பிலை. வேப்பமரம் 30-50 அடி உயரம் வளரக் கூடியது. இதன் ஒவ்வொரு பாகமும் வலி நிவாரண மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளது. காலகாலமாக இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் வேப்பிலை ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.

வேப்பமரத்தில் எல்லா பகுதிகளும் – இலைகள், பூ, விதைகள், பழங்கள், வேர் மற்றும் கிளைகள் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது. வீக்கம், தொற்று, காய்ச்சல், சரும நோய், மற்றும் பல் பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வைத் தருகிறது. ஆசாதிரச்தா இண்டிகா என்பது இதன் தாவர பெயராகும். இதில் அமைந்திருக்கும் சில கூறுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

எப்படி கட்டுப்படுத்துவது நீரிழிவை?
நிர்வகிப்பது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் புத்திசாலித்தனமாகவும் ஆரோக்கியமாகவும் உங்கள் உணவுத் தேர்வுகள் இருக்கும்போது இரத்த சர்க்கரை அதிகரிப்பால் எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் வராமல் தடுக்கலாம்.

மேலே கூறிய எந்த ஒரு முயற்சியும் நீங்கள் தற்போது எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளுக்கு இடையில் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாக ஆட்சேபிக்கிறோம். மருந்துகளில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.