திருவாரூர்…
தமிழகத்தில் காதலியை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிய காதலன், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி ரகசியமாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நல்லிச்சேரியைச் சேர்ந்தவர் செல்வி. 32 வயது மதிக்கத்தக்க இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்த செம்மங்குடியை சேர்ந்த செந்தில் முருகன் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றிய நிலையில், நெருங்கியும் பழகியுள்ளனர்.
அதன் பின் இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால், முருகன் வீட்டில் இவர்களின் காதலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் முருகன், செல்வியுடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.
அதன் பின் சில ஆண்டுகள் வெளிநாட்டிற்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய முருகனுக்கு, வீட்டில் பெற்றோர் பெண் பார்த்து கடந்த புதன் கிழமை திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை அறிந்த செல்வி, உடனடியாக இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.
உடனடியாக உடனடியாக திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்வி விரைந்த போது, அங்கு மண்டபத்திற்கு முன்பு நின்றிருந்த மாப்பிள்ளை வீட்டார் அவரை உள்ளே விடவில்லை. அவர்களிடம் இருந்து வெளிவர முயன்ற அவர் ஒரு கட்டத்தில், கையை பிடித்து இழுத்ததாக புகார் அளிப்பேன் என்று சத்தமிட்டதால், உறவினர்கள் விலகினர்.
பின்னர் அங்கு வந்த செல்வியின் சகோதரர் அவரை கையை பிடித்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துச்சென்றார். ஆனாலும் அங்கிருந்து செல்ல மறுத்து செல்வி அடம்பிடித்தார்.
செல்வியின் போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க , மாப்பிள்ளை முருகன் திட்டமிட்டபடியே தனக்கு பார்த்த மணப்பெண்ணின் கழுத்தில் தாலிகட்டினார்.
அவரது திருமணம் நடந்தது தெரியவந்ததும், மீண்டும் சென்று கத்தி கூச்சலிட்டு செல்வி ரகளை செய்ததால் செந்தில்குமாரின் சென்னை காதல், இரு வீட்டார் உறவினர்கள் மத்தியில் அம்பலமானது.
அவர் தன்னிடம் முருகன் நெருக்கமாக இருக்கும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளதாக கூறியதால், இந்த பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் வைத்து பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறி செல்வியையும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் சிலரையும் பொலிசார் அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.