இந்தியாவில்..
இந்தியாவில் தனது செவிலியர் வேலையை உதறிதள்ளிவிட்டு கணவருடன் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்து வரும் பெண்ணின் செயல் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்மிதா (37). இவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 2011ல் இருந்து 2019ஆம் ஆண்டு வரை செவிலியராக பணியாற்றினார்.
இதன்பின்னர் அந்த பணியை ராஜினாமா செய்த ஸ்மிதா தனது கணவர் பிரதீப்பின் மனிதநேய பணிக்கு உதவியாக இருக்க முடிவு செய்து அவருடன் ஒடிசாவுக்கு வந்தார். பிரதீப் த.ற்.கொ.லை செ.ய்.தவர்கள், விபத்தில் இ.றந்தவர்களின் ச.டலங்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையடுத்து கணவருடன் சேர்ந்து மது ஸ்மிதாவும் அந்த பணியை செய்து வருகிறார். முக்கியமாக கொரோனாவால் இறப்பவர்கள் பலரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய அவர்களின் உறவினர்கள் முன் வருவதில்லை.
அவர்களின் சடலங்களுக்கும் இந்த தம்பதி இறுதிச்சடங்கு செய்கிறார்கள். இது குறித்து பிரதீப் கூறுகையில், என் தாய் ரயிலில் அ.டிப்பட்டு தண்டவாளத்தில் இ.றந்து கி.டந்தார்.
அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் எனக்கு உதவவில்லை, என்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதால் தான் இந்த விடயத்தை நான் செய்து வருகிறேன் என கூறினார். ஸ்மிதா கூறுகையில், கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை கொரோனாவால் இறந்த 300 பேருக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளோம்.
வேறு காரணங்களால் இறந்தவர்கள் உடலுக்கு என மொத்தமாக 500 பேருக்கு இறுதிச்சடங்கு நடத்தியுள்ளோம். இந்த சமூகம் எங்களை விமர்சித்தது, ஆனால் ஒரு போதும் எங்கள் வேலையை நாங்கள் நிறுத்தவில்லை என கூறியுள்ளார்.