பீகார்…..
பீகாரைச் சேர்ந்த 26 வயதான சுரேஷ் மஞ்சி என்பவர் தினசரி கூலித் தொழிலாளி ஆவார். இவர் கான்பூரில் தனது மூத்த சகோதரருடன் வசித்து, ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி டெல்லிக்குச் சென்று காணாமல் போயுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை உடல் முழுவதும் எண்ணற்ற காயங்களுடன் வீட்டிற்கு திரும்பினார். பாதிக்கப்பட்ட சுரேஷ் மஞ்சி, தன்னை ஒரு கும்பல் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளினர் என்றும், இதற்காக அவரது கண்களில் சில ரசாயன ஊசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பார்வை இழப்பு ஏற்பட்டது எந்றம் கூறினார். இந்த செய்தி தெரிந்த அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் ஒன்று சேர்ந்து உள்ளூர் காவல் நிலையத்தில் கூடி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
அவர்களில் இருவர் கான்பூரைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஒரு பெண் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட சுரேஷ் கூறியதாவது, ‘குலாபி பில்டிங் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர், நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி என்னை ஏமாற்றினார். அவர் என்னை ஒரு பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவர் என்னை சித்திரவதை செய்து கண்மூடித்தனமாக தாக்கினார். பின்னர், விஜய் என்னை டெல்லியில் உள்ள பிச்சைக்காரர் மாஃபியா ராஜ் என்பவரிடம் விற்றுவிட்டார். அதன்பிறகு ராஜ் என்னை ஹரியானாவுக்கு அனுப்பி, பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். தன்னை துன்புறுத்தியவர்கள் இரும்பு கம்பியால் முத்திரை குத்தி போதை ஊசி போட்டார்கள்.
பிச்சை எடுக்காவிட்டால் உணவு தரமாட்டோம் என்று மிரட்டினர். பிறகு என் உடல்நிலை மோசமடைந்தபோது, ராஜ் என்னை விஜயுடன் கான்பூருக்குத் திருப்பி அனுப்பினார்.
அங்கு நான் மீண்டும் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். கடந்த வியாழக்கிழமை அன்று, உள்ளூர்வாசிகளின் உதவியுடன், நான் எப்படியோ என் சகோதரனின் இடத்தை அடைந்தேன் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.