சினிமா நடிகைகள் சிலரின் வாழ்க்கை பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கும். பல நடிகைகளின் வாழ்க்கை பரிதாபமாய் தொலைத்திருக்கிறார்கள். அப்படி தான் தற்போது ஒரு நடிகைக்கு நடைபெற்றுள்ளது.
போஜ்புரி சினிமாவை சேர்ந்தவர் நடிகை மணிஷா ராய். பல படங்களில் நடித்து வருகிறார். 45 வயதாகும் இவர் டூவீலரில் ஷுட்டிங்காக சென்றுள்ளார். உடன் அவரது உதவியாளர் சஞ்ஜீவ் என்பவரும் சென்றுள்ளார்.
அப்போது வழியில் வந்த கார் ஒன்று இவர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த மணிஷா சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.