ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிர் தப்பிய நடிகை! எதிர்பாராத விபரீதம்!!

763

ஹிந்தி சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருபவர் ஆலியா பட். இளம் நடிகையான இவர் தற்போது பிரமஸ்த்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவர் அமிதாப் பச்சப், ரன்பீர் கபூர் ஆகியோருடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

சுவாரசியமாக காட்சிகள் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆலியா உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவருக்கு அடிபட்டு பலமான காயம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ச்சியான படக்குழு அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயம் பலமாக எற்பட்டதால் ஆலியா வலி பொறுக்க முடியாமல் துடித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து 2 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம். இதனால் அவர் ஓய்வுக்கு பின் தான் ஷூட்டிங் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.