6 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளி இளைஞர் Greenock நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.ஸ்காட்லாந்தை உலுக்கிய இந்த பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞரின் பெயரை விசாரணை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
குறித்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி Alesha MacPhail குடும்பத்தாருக்கு நன்கு அறிமுகமானவர் எனவும், 16 வயது இளைஞர் எனவும் மட்டுமே தகவல் வெளியிட்டுள்ளனர்.
உறுதியான ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை விசாரணை அதிகாரிகள் Greenock ஷெரிஃப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் சடலம் Bute தீவில் அமைந்துள்ள பாழடைந்த ஹொட்டல் ஒன்றில் இருந்து கடந்த திங்களன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டது.கொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிறுமி Alesha MacPhail கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவமனை குறிப்புகள் உறுதி செய்துள்ளன.
திங்களன்று காலை 9 மணியளவில் சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களில் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காலை 6.25 மணியளவில் சிறுமி Alesha MacPhail-ஐ காணவில்லை என உறவினர்கள் கதறிய நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.
வெறும் 6,500 ஜனத்தொகை கொண்ட அந்த சமூகத்தை இந்த கொலைச் சம்பவம் கடுமையாக உலுக்கியது.
மட்டுமின்றி இந்த கொலை வழக்கு விசாரணையே அப்பகுதி மக்களை பொறுத்தமட்டில் மிகவும் தீவிரமாக நடத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
Bute தீவில் உள்ள பொலிசார் மட்டுமல்ல ஸ்காட்லாந்து பொலிசாரும் இந்த வழக்கு விசாரணையில் மிகத்தீவிரமாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.