நடிகை ஸ்ரீதிவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீதிவ்யா.
இந்நிலையில், புதிய பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில். 30 வயது ஆகும் இவருக்கு திருமணம் செய்து வைக்க இவரது குடும்பத்தார் முடிவு எடுத்துள்ளார்கள் என கூறுகிறார்கள்.
ஸ்ரீதிவ்யா தனக்கு நெருக்கமான மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாகவும். வீட்டில் சம்மதம் தெரிவித்தால் விரைவில் ஸ்ரீதிவ்யாவிற்கு திருமணம் நடக்கும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.