மில்லியன் கணக்கான பார்வையாளர்…….
”2 மணிநேரமாக ஒன்றுமே செய்யவில்லை” என தலைப்பிடப்பட்ட வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
இந்தோனேஷியாவை சேர்ந்தவர் முகமது டிடிட், இவருடைய யூடியூப் பக்கத்தில் 27,000 ஃபாலோவர்கள் உள்ளனர்.
இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில் வீடியோவை வெளியிடும் படி கேட்க, கடந்த மாதம் 10ம் திகதி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் என்ன. விசேஷம் என்றால், 2 மணிநேரமாக அவர் ஒன்றும் செய்யவில்லையாம்.
‘2 JAM nggak ngapangapain’ என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோ(’இரண்டு மணிநேரம் ஒன்றும் செய்யவில்லை’) மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
ஒரு சிலர் அவர் எத்தனை முறை கண்களை சிமிட்டினார் எனறும் சிலர் அடடே,… ஒன்றுமே செய்யாமல் சம்பாதித்து விட்டாரே என பலவிதமான கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக முகமது டிடிட் தனது பதிவில், ‘இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை உங்களுக்கு கூறுகிறேன்.
இந்தோனேசிய இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையிலான வீடியோவை வெளியிடுமாறு பலரும் கூறினர். அதனால் கனத்த இ தயத்துடன் இந்த வீடியோ எடுத்தேன்.
இதில் என்ன நன்மை என்று நீங்கள் கேட்டால் அது பார்வையாளர்களான உங்களை பொறுத்தது’ என்று தெரிவித்துள்ளார்.