10 ஆண்டு திருமண வாழ்க்கை : 2 குழந்தைகள் பெற்ற பின்னர் ஆணாக மாறிய இளம்பெண் : அதிரவைக்கும் காரணம்!!

243

இந்தியாவில்..

இந்தியாவில் இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ஆணாக மாறியுள்ள நிகழ்வு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் 36 மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பின் ஆணாக மாறியுள்ளார்.

மேலும் தனக்கு பிறந்த குழந்தைகளிடம் தன்னை அப்பா என்று அழைக்க தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குழந்தைகளும் அப்பா என்று அவரை அழைத்து வருகிறார்கள். இவர் ஆணாக மாறிய பின்னர் தன் பெயரை கவின் என்று மாற்றிக் கொண்டார்.

இவருக்கு 27 வயதில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து 2 குழந்தைகளுக்கு தாயாகி 10 வருட திருமண வாழ்க்கையை முடித்துள்ளார். இந்நிலையில் இவரது உடலில் சில மாறுதல்கள் நடந்துள்ள நிலையில் தனது 36 வயதில் ஆணாக மாறியுள்ளார்.

இவர் தனது கணவரிடம் இதைப்பற்றி எடுத்து கூறியுள்ளார். அவரும் அதை ஏற்றுக் கொண்டு நண்பன் போல் பழகி வருகிறார். ஆனால் சமூகம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதுதொடர்பாக கவின் கூறியதாவது, பெண்ணாக பிறந்த ஒருவர் ஆணாக மாறுவதையும், ஆணாக பிறந்தவர் பெண்ணாக மாறுவதையும், இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன தவறு இருக்கிறது. உடலில் ஏற்படும் இதுபோன்ற மாற்றங்களுக்கு அவர்கள் என்ன செய்ய முடியும். ஆனால் இந்த சமூகம் உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்களை கூட ஏற்றுக் கொள்ளாமல் எங்களை போன்றவர்களை ஒதுக்கி வைக்கிறது.

நாங்கள் என்ன வேறு கிரகவாசிகளா? உங்களில் ஒருவர் தானே? இருந்தாலும் நிச்சயம் இந்த சமூகம் ஒரு நாள் எங்களை ஏற்றுக்கொள்ளும் என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.