பிரித்தானியா…………
பிரித்தானியாவில் 10 மாத குழந்தையின் தொண்டையில் பெரிய ஓட்டை இருப்பதை பார்த்த தாய், அது ஒரு ஸ்டிக்கர் என தெரியவரும் வரை மருத்துவமனையில் பெரும் அலப்பறையை கூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நகரமான Colchester-ல் வசிக்கும் 24 வயதாகும் பெக்கி ஸ்டைல்ஸ் (Becky Stiles), தனது 10 மாத குழந்தை Harvey-க்கு நேப்பியை மாற்றும் போது, குழந்தையின் வாய்க்குள் மேல் தொண்டையில் ஒரு வட்டவடிவிலான பெரிய ஓட்டையை பார்த்துள்ளார்.
அது என்ன? குழந்தைக்கு என்ன ஆனது? என கைவைத்து பார்க்க முயற்சித்துள்ளார். ஆனால் குழந்தை கை வைக்க விடாமல் கதறி அழுதுள்ளது.
மிகவும் பதறிப்போன பெக்கி, Colchester-ல் உள்ள பொருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவரை பார்க்கும் முன்பே, வரவேற்பறையில் இருந்த செவிலியர் ஒருவர் குழந்தையின் வாய்க்குள் பேணா லைட்டை வைத்து சோதித்துள்ளார்.
அப்போது 30 நொடிகளில், குழந்தையின் வாயில் இருப்பது ஓட்டை அல்ல, அது ஒரு கருமையான ஸ்டிக்கர் மேல் வாய் பகுதியில் பலமாக ஒட்டிக்கொண்டுள்ளது என தெரிந்துகொண்டார்.
இருப்பினும் அபு ஒரு ஓட்டை தான் என அடித்துக் கூறி மருத்துவமனையில் பெரிய அலப்பறையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த ஸ்டிக்கர் பொறுமையாக குழந்யிதையின் வாயிலிருந்து செவிலியர் எடுத்தார். அதன் பிறகு தான் பெக்கி சந்தமானார்.
கொரோனா மற்றும் இல்லை என்றால் அந்த செவிலியரை கட்டி அனைத்து நன்றி தெரிவித்திருப்பேன் என பெக்கி கூறினார். ஆனால் அவர் சற்று நேரத்தில் முட்டாள் தனமாக மாறி மருத்துமனையே பதறவைத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.