100 வயதைக் கடந்த ‘ராட்சத மீன்’ அமெரிக்க ஆற்றில் பிடிபட்டது!

456

அமெரிக்காவில்…

அமெரிக்காவில் உள்ள நதி ஒன்றில் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் ஒரு ராட்சத மீனை ஒருவர் பிடித்துள்ளது விஞ்ஞானிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் ஆற்றில் அல்பேனா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர், கடந்த ஏப்ரல் மாதம் 6 அடி 10 அங்குலம் நீளமும், 240 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 109 கிலோ) எடையுள்ள ஒரு பெண் மீனை பிடித்துள்ளார்.

இது ஏரி ஸ்டர்ஜன் இனத்தை சேர்ந்த மீன் ஆகும். இதனை அமெரிக்காவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ஏரி ஸ்டர்ஜன் மீன்களில் ஒன்று என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும் இந்த மீனின் சுற்றளவு மற்றும் அளவை அடிப்படையாகக் கொண்டு, இது பெண் என்றும் 100 வயதுக்கு மேற்பட்டது என்றும் கருதப்படுகிறது.

ஹட்சன் விரிகுடாவிலிருந்து மிசிசிப்பி நதி வடிகால் வழியாக வட அமெரிக்காவில் வாழும் நன்னீர் மீன்கள் ஸ்டர்ஜன். மெதுவாக நகரும் இந்த உயிரிம், ஏரிகள் அல்லது ஆற்றங்கரைகளின் அடிப்பகுதியில் உள்ள மணல் அல்லது சரளை வாழ்விடங்களை விரும்புகின்றன, அவை முட்டையிடும் பருவத்தில் ஆறுகளில் பயணிக்கின்றன.

ஆண் மீன் 50 முதல் 60 ஆண்டுகள் வரை வாழ்நாளை கொண்டவையாக இருக்கின்றன, ஆனால் ஒரு பெண், 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவை தெரிவித்துள்ளது.

இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்ட 20 மாநிலங்களில் 19 இடங்களில் அச்சுறுத்தப்பட்டதாக பட்டியலிடப்பட்டுள்ளன. பிடிப்பட்ட இந்த அரிய மீன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.