கோவில்கள் சில காடுகளிலும், மலை உச்சிகளிலும், பலமலைகளை தாண்டியும், நீருக்கு அடிகளிலும் தான் இருப்பதை பார்த்தும் சென்று வழிபட்டும் இருப்போம். அனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகைகுள் இடுப்பிற்கு மேல் தண்ணீர் அமைந்து கடந்து செல்லும் அதிசய நரசிம்மர் கோவில் இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பிதார் நகரில் மணிசூல மலைத்தொடர்களுக்குள் அமைந்திருப்பதுதான் ஜர்னி நரசிம்மர் கோவில். இக்கோவில் மலைகுகைகளில் வரட்சியான காலங்களிலும் கூட 4 முதல் 5 அடி வரை தண்ணீர் சென்று கொண்டிருகிறதாம். ஆனால் தண்ணீர் எங்கிருந்து வரும், எங்கே சென்றடையும் என்பது புதிராக உள்ளது.
நரசிம்ம கோவிலில் வரும் நீர் பல மூலிகையின் சக்திகளை கொண்டு ஓடுகிறதாம். இதனால் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நோய்களும், மனதால் ஏற்பட்ட வியாதிகளும் குணமடைகிறது. இக்குகைக்குள் வவ்வால்கள் அதிகமாக தொங்கியபடியும், வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் செய்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.