மேற்கு வாங்கம்…
வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசமின்றி பாலியல் தொல்லைகள் சகஜமாகிவிட்டது.
இந்நிலையில், மேற்கு வாங்க மாநிலத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 11 வயது சிறுமி தனது உறவுக்கார பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். அந்த உறவுக்கார பெண் 22 வயது இளைஞன் ஒருவரை காதலித்து வந்தார்.
அந்த காதலன் அடிக்கடி வீட்டுக்கு வந்து காதலியை பார்த்துவிட்டு செல்வார். அப்போதுதான் அந்த 11 வயது பெண்ணை அவர் பார்த்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணை அடைய வேண்டும் என்ற வெறி அந்த இளைஞருக்கு வந்தது.
அந்த பெண்ணை அடைய வேண்டும் என்றால், முதலில் காதலியை ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும் என்று எண்ணிய காதலன்.. காதலிக்கு புது செல் போன் மற்றும் கொஞ்சம் பணமும் கொடுத்துள்ளார். இதன் பிறகு, காதலியிடம் சென்று அந்த 11 வயது பெண்ணை அடைய வேண்டும் என்று சொன்னதும்…
அதற்கு அந்த பெண் காதலனுக்கு பிளார் என்று சத்தம் கேக்கும் அளவிற்கு அடி விடுவார் என்றால்.. அதற்கு மாறாக காதலன் செல் போன், பணம் கொடுத்து கேட்டதும் காதலி ஓகே சொல்லிவிட்டார்.
இதனையடுத்து, காதலுடன் அந்த 11 வயது பெண்ணை தங்க வைக்க ஏற்ப்பாடு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே வீட்டில் 11 வயது சிறுமியை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியை தாக்கி, அந்தரங்க பகுதியில் கட்டுகளை செருகியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை அந்த வாலிபர் தூக்கிச்சென்று ஆளில்லாத பகுதியில் வீசியுள்ளார். மறுநாள் காலை, பாசிர்ஹாட் சப்-டிவிஷனில் உள்ள மீன்வளத்துறை அருகே சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது சிறுமி உயிருக்கு போராடி வருகிறார். தகவலறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஹவுராவின் டோம்ஜூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த காதலனைக் கைது செய்தனர். ஆனால் இதற்கெல்லாம் காரணமான அந்த உறவுக்கார பெண்ணை காணவில்லை.. இந்த சம்பவத்தால் மேற்கு வங்க மாநிலமே அதிர்ந்துபோயுள்ளது.