11 பேர் தற்கொலை சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு தொடர்பு? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

1005

டெல்லி புகாரி அருகே நடைபெற்ற தற்கொலை சம்பவம், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தை நாராயணன் உத்தரவின் பேரில் அவரது மகன் லலித் தான் செயல்படுத்தியுள்ளதாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி பிகாரி அருகே சாண்ட் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 1-ம் தேதியன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து போயினர்.

அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, வீட்டிலிருந்த குறிப்பேடு ஒன்றினை காவல்துறையினர் கண்டறிந்தனர். அதன்பேரிலே தற்போது தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மர்மமான முறையில் நடைபெற்றள்ள இந்த சம்பவத்தில், நாராயணனின் மகன் லலித் பாட்டியாவுக்கு அதிக தொடர்பு இருப்பதாகவே போலீசார் கருதுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போலவே லலித் அடிக்கடி வீட்டில் நடந்துகொள்வாராம். அதேசமயம் தந்தையின் குரலிலே அடிக்கடி பேசியும் வந்துள்ளார்.

இதனால் தந்தை தான், தன் மூலமாக குடும்பத்தை வழிநடத்தி வருகிறார் என லலித் நம்பியுள்ளார். அதனையே குடும்பத்தாரும் நம்பியதால், ஏற்பட்ட விபரிதமே 11 பேரின் தற்கொலை சம்பவம்.

இறப்பதற்கு முன் 20 சப்பாத்திகளை குடும்பத்தார் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் தொட்டுக்கொள்ள எதையும் வாங்கவில்லை.

அந்த சப்பாத்திகளை அனைவரும் தாய் மற்றும் நாராயணன் கைகளால் மட்டுமே உண்ணவேண்டும் எனவும் அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து சப்பாத்திகளை டெலிவரி செய்யவந்த பையனுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளும்பொழுது, அவர்கள் சப்பாத்திகளை வாங்கும்பொழுது இறப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

முன்னதாக காவல்துறையால் கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில், “தற்கொலை செய்துகொண்டால் தந்தை காப்பாற்றுவார்” என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.

மேலும், “கடைசி நேரத்தில் உங்கள் கடைசி ஆசையை சொல்லும்போது மேகங்களில் வெடிப்பு ஏற்படும், பூமி நகரும் என அனைவரும் சப்தமாக கத்தினால் நான் வருவேன், வந்து உங்களை காப்பேன்” என்று தந்தை சொல்வதை போல் லலித் எழுதியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.