11 லட்சம் மதிப்புள்ள அரியவகை கூழாங்கல் திருடிய பாட்டி: பொலிஸ் வலைவீச்சு!!

1160

கனடாவில் நடைபெற்ற கண்காட்சியில் பெண்ணொருவர் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் டொரோண்டோ நகரில் உள்ள கார்டினர் மியூசியத்தில் பிரபல கலைஞர் யோகோ ஒன் தலைமையில் கலைக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கலை வைத்து தியானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கூழாங்கல்லானது யோகோ ஒன் தன் கைப்பட ‘லவ் யுவர்செல்ப்’ என எழுதி இருந்தது ஆகும்.

இதன்படி இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்த கற்களை எடுத்து, கையில் வைத்துக் கொண்டு தியானம் செய்ய வேண்டும். பின் மீண்டும் பழைய இடத்திலேயே அந்தக் கல்லை வைத்து விட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், மற்றவர்களைப் போலவே ஒரு கல்லை கையில் எடுத்து தியானம் செய்துள்ளார்.

ஆனால் மீண்டும் அதனை பழைய இடத்தில் வைக்கவில்லை. அதற்கு மாறாக அதனை பாட்டி திருடிச் சென்று விட்டார்.

இச்சம்பவம் குறித்து கடந்த மாதம் 12ம் தேதிக்கான, சிசிடிவி கேமராக் காட்சிகளின் உதவியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.