பிரேசில் நாட்டில் 7 மாத குழந்தையை 118 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசியதில் அக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளது.
Sao Luis- இல் அமைந்துள்ள José Sarney பாலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பாலத்தின் மேலே நின்றுகொண்டிருந்த தாய், தனது 7 மாத குழந்தையை கீழே தூக்கி வீசியுள்ளார்.
இவர், வீச முற்படும் போது, கீழே நின்றுகொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டு அலறியுள்ளனர், ஆனால் இதனை பொருட்படுத்தாடு அப்பெண் குழந்தையை வீசியுள்ளார், ஆனால் பாலத்திற்கு கீழே மணல் தண்ணீரால் சூழப்பட்டு களிமண் போன்று இருந்ததால் கீழே விழுந்த குழந்தை லேசான காயத்துடன் அப்படியே களிமண்ணில் குத்தாக நின்றுள்ளது.