அதிர்ச்சியளிக்கும் சிறுமியின் வாழ்க்கை கதை
பிரித்தானியாவை சேர்ந்த 19 வயது சிறுமி 12 வயதிலே மது, உள்ளிட்ட பல போதை பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். லோரி ஹாக்கின்ஸ் (19) என்கிற சிறுமி, 12 வயதிலே மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறார். மது குடிப்பது, ஊக்க மருந்து எடுத்துக்கொள்வது பின்னர் குளிப்பது என இவருடைய தினசரி வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லோரி, எனக்கு தினமும் மது தேவைப்பட்டது. அப்பொழுது தான் நானும் என்னுடைய தோழியும், தற்போது 37 வயதாகும் ராபர்ட் டேவிஸ் என்பவரை சந்தித்தோம். அவரும் எங்களுக்கு உதவி செய்வதாகவும், அதற்கு பதிலாக எங்களுடைய செல்போன் எண் வேண்டும் என கேட்டார்.
நானும் கொடுத்து அவருடன் தினமும் பேசி பழக ஆரம்பித்தேன். அப்படி தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. அவருடன் பழக வேண்டாம் என என்னுடைய தோழி அடிக்கடி வற்புறுத்திக்கொண்டே இருந்தாள். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.
எனக்கு 13 வயது நடக்கும் போது ஒருமுறை இருவரும் ஒரே படுக்கையில் இருக்க ஆரம்பித்தோம். அதில் எந்த தவறும் இருப்பதாக அப்போது எனக்கு தெரியவில்லை.
3 மாதம் கழித்து என்னுடைய உடல் எடை அதிகரித்தது. இதனை பார்த்த என்னுடைய பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பரிசோதித்தபோது நான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் ராபர்ட் என்னிடம் இருந்து விலகி செல்ல ஆரம்பித்தான். யார் காரணம் என்று கேட்டால் பெயரை சொல்லக்கூடாது என்றும் என்னிடம் கேட்டுக்கொண்டான்.
எதற்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டது என்பதை மட்டும் நான் புரிந்து கொண்டேன். என்னுடைய உறவினர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டு யார் காரணம் என துருவித்துருவி விசாரித்தனர். ஆனால் நான் வாய் திறக்க மறுத்துவிட்டேன்.
பின்னர் எனக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அன்று முதல் ராபர்ட் என்னிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். ஒருநாள் தனியாக இருக்கும் போது என்னுடைய கர்ப்பம் குறித்து தந்தையிடம் கூறினேன். மேலும், நான் போதைக்கு அடிமையாகியிருந்த சமயம் எனக்கு அதிக அறிவுரைகளை வழங்கிய ஒரு பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தேன்.
நடந்த அனைத்தையும் முழுமையாக விவரித்தேன். உடனே ராபர்ட் கைது செய்யப்பட்டான். ஜூன் 19, 2015ம் திகதியன்று நடந்த வழக்கில் ராபர்ட்டுக்கு 10 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த சம்பவத்தில் இருந்து நான் சிறிது சிறிதாக விலகி வந்துகொண்டிருக்கிறேன். மதுவை முற்றிலும் நிறுத்திவிட்டேன். நான் முழுமையாக மீண்டதும், இதில் பாதிக்கப்பட்டுள்ள பல சிறுமிகளுக்கு உதவ முடிவெடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.