பாலியல் தொழில் என்றாலே தவறான பாதையில் பயணிக்கும் வாழ்க்கை என்ற அடையாளம் இந்த சமூகத்தில் இருக்க, மத்தியபிரதேசத்தில் உள்ள Banchhada சமூகத்தை சேர்ந்த பெண்கள் இந்த மண்ணில் பிறக்கையிலேயே பாலியல் தொழிலாளி என்ற அடையாளத்துடனேயே பிறக்கின்றனர்.
காரணம், இந்த சமூக பெண்கள் 12 வயது தொடங்கியவுடன் தங்கள் குடும்பத்தை பராமரிக்கவும், தங்களது பணத்தேவைக்காகவும் கண்டிப்பான முறையில் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும்.
மத்தியபிரதேசத்தில் உள்ள Neemuch, Ratlam மற்றும் Mandsaur ஆகிய மாவட்டங்களில் 75 கிராமங்கள் உள்ளன, இந்த கிராமங்களில் அதிகமாக இந்த சமூகத்தை சேர்ந்த பெண்களே இருக்கின்றனர், இவர்களில் 65 சதவீதம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.
12 வயது நிரம்பியவுடன் இவர்களது வீட்டோடு சேர்த்து பாலியல் தொழிலுக்காக ஒரு அறையும் ஒதுக்கப்படுகிறது.
ஒரு தலைமுறை தலைக்க வேண்டுமென்றால் ஆண் குழந்தைதான் வேண்டுமென்று ஆசைப்படுவார்கள், ஆனால் இந்த சமூகத்தினர் தங்களுக்கு பெண் குழந்தை மேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார்கள்.
காரணம் ஒரு குடும்பத்தை நிர்வகிக்க தேவையான பணம் இவர்களால் மட்டும் தான் ஈட்ட முடியும் என அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நம்புகின்றனர்.
இப்பெண்களுக்கும் பாலியல் தொழிலை தவிர வேறு ஒன்றும் தெரியாது, பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய 12 வயதில் , கவர்ச்சியான ஆடையை அணிந்து, சிவப்பு சாயத்தை உதட்டில் தடவிக்கொண்டு, முகம் நிறைய அதிக ஒப்பனைகளுடன் ஆண்களை தேடி காத்திருக்கின்றனர் இந்த சமூகத்தை சேர்ந்த சிறுமிகள்.
இவர்களை பொறுத்தவரை இது தவறு கிடையாது, தங்களுக்கு தேவையான பணத்தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள ஒரு தொழில் தேவைப்படுகிறது, எனவே இது தொழில் என்கின்றனர்.
இந்த 3 கிராமத்திலும் ஆண்களை விட பெண்களே அதிகம் வசிக்கின்றனர், 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3,595 பெண்கள் மற்றும் 2,770 ஆண்கள் இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
மேலும், பாலியல் தொழிலுக்காவே இந்த சமூகத்தினர் வேறு பகுதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
இந்த பகுதி பெண்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து பார்த்ததில் 15 முதல் 16 சதவீதம் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளதாக அரசு சார அமைப்பு தெரிவித்துள்ளது.
என்னதான் ஒடுக்குமுறைகள் மேற்கொண்டாலும் இப்பெண்களால் தங்களால் தொழிலை கைவிட இயலவில்லை.