13 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்ட டியூசன் டீச்சர்! மெஹந்தி-முதலிரவு சடங்கு: அ திர்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்!!

329

இந்தியா……….

இந்தியாவில் தன்னிடம் படிக்க வந்த 13 வயது சிறுவனை பெண் ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மா நிலம் ஜலந்தரின் பஸ்தி பவா கேல் பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவருக்கு நீண்டகாலமாக திருமணம் ஆகாமல் இருந்துள்ளது.

இதனால் அவர் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர், அந்த பெண் ஆசிரியையின் ஜாதகத்தில் திருமண தோஷம் இருப்பதாகவும், மைனர் சிறுவன் ஒருவனை அடையாள திருமணம் செய்து கொண்டதால், உங்கள் தோஷம் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் ஆசிரியையிடம் 13 வயது சிறுவன் டியூசன் சென்று வந்துள்ளான். இதனால் அந்த மைனர் சிறுவனாக அவரை தெரிவு செய்த அந்த ஆசிரியை, மாணவரின் பெற்றோரிடம் பேசிய மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டியிருப்பதால் ஒருவாரம் அவரது வீட்டிலேயே தங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுவனின் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, அதன் பின் சிறுவனை கட்டாயப்படுத்தி ஆசிரியையும், அவரின் பெற்றோர்களும் திருமண சடங்குகள் செய்துள்ளனர்.

இந்த திருமணத்தின் போது மெகந்தி வைபவம், முதலிரவு என அனைத்து சம்பிரதாயங்களும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வளையல்களை உடைத்து திருமண பந்தம் முறிந்ததாகவும், திருமண முறிவு சம்பிரதாயங்கள் நடைபெற்றுள்ளது.

இது எல்லாம் நடந்த பின் வீட்டிற்கு திரும்பிய அந்த மாணவன், ஆசிரியை வீட்டில் நடந்தவற்றை எல்லாம் கூறியுள்ளான். இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார், பொலிசார் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து சமாதானப் பேச்சு நடத்தி இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த பெண் குடும்பத்தினர் மீது பொலிசார் புகார் பதியவில்லை என்ற குற்றம் கூறப்பட்டது. இது குறித்து, பஸ்தி பவா கேல் காவல்நிலைய அதிகாரி ககன் தீப் சிங் கேகோன் கூறுகையில், மாணவருடன் ஆசிரியை திருமணம் செய்தது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இருப்பினும் மாணவரின் பெற்றோர் புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டதாக கூறினார். இருப்பினும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டதால், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.