13,000 வருடங்கள் பழமையான பாதத் தடங்கள் கண்டுபிடிப்பு!!

724

கனடாவின் பசுபிக் கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் சுமார் 13,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாதத் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் விக்டோரியாவில் உள்ள Hakai Institute பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

29 வரையான பாத அடையாளங்கள் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றினை பகுப்பாய்வு செய்வதற்காக புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதங்களின் நீளங்களும் அளவிடப்பட்டுள்ளன.

ஆசிய நாடுகளில் இருந்து வட அமெரிக்காவிற்கு மனிதர்கள் குடிபெயர்ந்ததாக கருதப்பட்டு வருகின்றது.

இவ்வாறு தரைவழியாக குடிபெயர்ந்தவர்களின் கால் தடங்களே இவையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.