14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு பேரம் பேசிய கயவன்!!

1848

தமிழகத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு அதற்கு பேரம் பேசிய நபரை சிறுமியின் பெற்றோர் அடித்து உதைத்ததால், அங்கு பரபரப்பு நிலவியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்துள்ள நத்தகயம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி(32). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனால் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் ஆசைத்தம்பி வாலிப்பட்டியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரை கடந்த 6 மாதமாக பின் தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனால் அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆசைத்தம்பியின் ஊரான நத்தகயம் பகுதிக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடம் தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியதால், கடந்த வியாழக்கிழமை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஆசைதம்பி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் கூடியுள்ளனர்.

அப்போது சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசைத்தம்பியிடம் கூறியுள்ளனர்.

ஆனால் ஆசைத்தம்பி அது எல்லாம் முடியாது, வேண்டுமென்றால் நஷ்ட ஈடாக 3 லட்ச ரூபாய் கொடுத்துவிடுவதாகவும், பணத்தை வாங்கி கொண்டு கருகலைப்பு செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், ஆசைத்தம்பியை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். சற்றும் எதிர்பார்க்காத ஆசைத்தம்பி அடிதாங்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் அங்கிருக்கும் மகளிர் காவல்நிலையத்தில் ஆசைத் தம்பி மீது புகார் அளித்துள்ளனர். ஆனால் பொலிசார் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருவதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.