15 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் இளைஞரின் சடலம் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

518

கேரள….

இந்திய மாநிலம் கேரளாவில் 6 மாதங்களுக்கு முன்பு மாயமான இளைஞர் 15 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தாயாருடன் வங்கிக்கு சென்றுள்ளார். 17 வயதேயான அமல் கிருஷ்ணா என்பவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்பது மட்டுமல்ல, அவரை தேடும் நடவடிக்கையில் பொலிசாருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்த நிலையில் சுமார் 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் அமல் கிருஷ்ணாவின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட சடலத்தின் அருகாமையில், அவர் பயன்படுத்திய மொபைல், சிம் அட்டை, அவரது புகைப்படம் உள்ளிட்டவையும், அவர் மாயமாகும் போது அணிந்திருந்த உடையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இளைஞரின் சடலத்தின் அருகே ப்ளூ டூத் ஹெட்போன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமது மகனை கொலை செய்துள்ளார்கள் எனவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தாம் நம்பவில்லை எனவும் தாயார் ஷில்பா தெரிவித்துள்ளார்.

மாயமாகி 6 மாதங்களுக்கு பிறகு தமது மகனை இந்த பாழடைந்த வீட்டில் கொண்டு சேர்த்த மர்ம நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஷில்பா தெரிவித்துள்ளார்.

மேலும், அமல் கிருஷ்ணாவின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமான விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஷில்பா ஏற்கனவே பொலிசாரை நாடியிருந்தார்.

பணம் மாயமானத்தில் அமல் மனமுடைந்து காணப்பட்டார் எனவும், அந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தினர் சார்பில் பொலிசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.