15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா! அதிர்ச்சியில் பிரபல தொலைக்காட்சி!!

571

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கடமையாற்றி வரும் மா.கா.பா ஆனந்த் பிரபல நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி 15 இலட்சத்தை வீணடித்துள்ளார்.

அண்மையில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.இந்த நிகழ்ச்சியின் போது, வயலினை விளையாட்டாக உடைத்து விட்டாராம். இதன் விலை 15 இலட்சமாம், இதை கேட்ட அரங்கமும், பிரபல தொலைக்காட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த தகவலை மா.கா.பா ஆனந்த் விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளாராம். மா.கா.பா.ஆனந்த் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார். இதேவேளை, நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.