16வருடம் காத்திருந்த தாய்க்கு விடை கொடுத்த கொரோனா : கால்நடையாக வந்தடைந்த மகன்!!

1064

16வருடம் காத்திருந்த தாய்

சினிமா ஆசையில், வீட்டை விட்டு கிழம்பிய மகன் 16வருடங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கால் வீடு திரும்பியுள்ளார்.

சாத்தூரில் நந்தவனப்பட்டி தெருவில் வசிக்கும் லட்சுமி. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். கணவரை இழந்த அவரது 3வது மகன் பாண்டியராஜன் 16 வருடங்களுக்கு முன் காணமல் போய்யுள்ளார்.

காவல் நிலையத்தில் புகாரளித்தும், கண்டுபிடிக்க முடியாமல் தாய் திணறிவந்துள்ளார். காலப்போக்கில் தனது மகனின் நினைவுகளோடு தனது பணிகளை செய்து கொண்டிருந்துள்ளார் லட்சமி.

இந்ந நிலையில், மகன் வீட்டிற்கு வந்துள்ளார். இதை கண்டு லட்சுமிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருந்தது பற்றி பாண்டியராஜனிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, சினிமா ஆசையில் வீட்டில் சொல்லாமல் சென்னைக்குச் சென்றேன்.

ஆனால், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த வேலையைச் செய்து வந்தேன். நல்ல நிலைக்கு வந்த பிறகு வீட்டுக்குச் செல்வோம் என்று வாழ்ந்ததில் காலம் ஓடிவிட்டது.

பாண்டியராஜன் (ஆர்.எம்.முத்துராஜ்) இந்தக் கொரோனா ஊரடங்கால் சென்னையில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. தங்க இடமில்லை, உணவு கிடைக்கவில்லை.

உதவி செய்யவும் யாரும் இல்லை. வேறு வழி தெரியவில்லை. அதனால், என் அம்மாவைத் தேடி வந்துவிட்டேன். சென்னையிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய எனக்கு வழியில் விசாரித்த பொலிசார் உணவு வழங்கினார்கள்.

பின்பு காய்கறி வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். இப்படி பல வண்டிகள் மாறி மாறி ஊர் வந்து சேர்ந்தேன்” என்று கூறியிருக்கிறார்.