பிரித்தானியா…………
பிரித்தானியாவில், வெறும் 16 வயதே இருக்கும்போது லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்ற ஒரு பெண், இன்று பரிதாபகரமான நிலையில் வாழ்ந்து வருகிறார்.
பிரித்தானியாவிலுள்ள Cumbria என்ற இடத்தில் அதிவேகத்தில் சென்ற ஒரு காரை துரத்திச் சென்ற பொலிசார், பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி மடக்கிப்பிடிக்கும் அளவுக்கு அந்த காரின் சாரதி கட்டுப்பாடில்லாமல் இருந்தார்.
காரணம், அவர் கொக்கைன் என்னும் போ.தை.ப்.பொ.ரு.ளின் கட்டுப்பாட்டில் இருந்தார். அவர் யார் என்பது தெரியவந்தபோது பொலிசாருக்கு ஒரு அ.தி.ர்.ச்சி காத்திருந்தது. ஆம், பிரித்தானியாவிலேயே மிகவும் சிறிய வயதில் லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்று கோடீஸ்வரியான Callie Rogers (33)தான் அவர்.
அவ்வளவு பெரிய தொகையை வென்றும், 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று அரசின் நிதியுதவியைப் பெற்று அவர் வாழ்வது தெரியவந்தது.
சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே செல்வோரை சோதனையிடும் வேலையில், வெறும் 3.60 பவுண்டுகள் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் Callieக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
பணம் வந்ததும் காதலும் வந்தது… Nicky Lawson என்பவரை மணந்தார் Callie, 180,000 பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகைக்கு கு.டி.போ.ன.து குடும்பம். இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.
ஆனால், ஐந்தே ஆண்டுகளில் கா.த.ல் கசந்தது, த.ற்.கொ.லை.க்கு முயன்றார் Callie. ஒரு கட்டத்தில் பிள்ளைகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டார்கள். அப்போதும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக, 17,000 பவுண்டுகள் செலவு செ.ய்.து மார்பக அழகு சி.கி.ச்சை செ.ய்.து.கொ.ண்.டார் Callie.
நண்பர்கள் என்று கூறிக்கொண்டு ஏ.ரா.ள.மானோர் அவருடன் இணைந்துகொண்டார்கள், ஆனால், அவர்கள் நோக்கம் முழுவதும் அவரது பணத்தின் மேலேயே இருந்தது. கடைசியில் எல்லாம் இ.ழ.ந்.து, இன்று அ.ர.சின் நிதியுதவியை நம்பி வாழ்ந்துவருகிறார் Callie.