மதுரை…
மதுரை திருமங்கலம் அருகே வலையங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் வைத்து அப்பகுதியில் பிழைப்பு நடத்தியும், வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் 11ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
16 வயது சிறுமிக்கு ஒரு சகோதரன் உள்ளார். சிறுமியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து. தாயார் இறப்பிற்குப்பின் சிறுமி மற்றும் சிறுமியின் தம்பி ஆகியோரின் படிப்பு தொடர்பாக இணையதள கல்விக்காக தொலைபேசி எண் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
அதன்மூலம் சிறுமியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி, பள்ளி சிறுமியிடம் நெருங்கி பழகி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக., சிறுமியின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன் வீரணன் மற்றும் சிறுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து. வீரணன் பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதுடன் கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சிறுமியின் தந்தை நேற்று இரவு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் வீரணனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து. சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.