16 வயது மகளை தந்தை செய்த காரியம்: பொலிசார் எடுத்த நடவடிக்கையால் பரபரப்பு!!

552

சுரேஷ்….

மகளை தனது உறவினரும், நண்பருமான வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவை சேர்ந்த பொன்னுசாமி(40). இவரது 16 வயது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளார்.

தன்னை விட ஒருவயது அதிகமான சுரேஷ்(41) என்பவருக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது. இந்த சுரேஷ் இவர்களின் உறவுக்காரர் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று 41 வயது சுரேஷிற்கும், பள்ளி மாணவியான 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சிறுமி திருமணம் குறித்து இரு வீட்டார் குடும்பத்துடனும் விசாரணை நடத்தினர்.

இதில் குழந்தை திருமணம் செய்து வைத்த காரணத்திற்காக அவரது தந்தை மற்றும் புது மாப்பிள்ளை சுரேஷ் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.