17 வயது சிறுமியை லாட்ஜுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் : நேர்ந்த கொடுமை!!

273

சீர்காழி….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவருக்கு 41 வயதாகிறது. லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில்,திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு லாட்ஜில் அறை எடுத்து சிறுமியுடன் தங்கியுடன் தங்கியுள்ளார். அப்போது, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி சிறுமியுடன் பாலா பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்னர், மறுநாள் அந்த சிறுமி பாலாவிற்கு போன் செய்ததில் பாலா போன் எடுக்கவில்லை என்பதால் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுமி குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமியிடம் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக்கொண்டு பாலாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி யாருடைய ஆதரவில் இருந்து வருகிறார்? அவருக்கும் லாட்டரி டிரைவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதை குறித்து தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.