17 வயது சிறுமிக்கு 36 வயது ஆணுடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்த பெற்றோர்!!

922

தமிழகத்தில் 17 வயது சிறுமியை 36 வயது ஆணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கொந்தகைப் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி-ஜெயபிரதா. இவர்களுக்கு 17-வயதில் மகள் உள்ளார். அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமிக்கும், சிறுமியின் உறவினரான பிராகாஷ் (36) என்பவருக்கும் இன்று பெற்றோர் சம்மதத்துடன் சட்ட விரோதமாக திருமணம் நடைபெறவிருந்தது.

இது குறித்த தகவலை சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும், மாநில மகளிர் ஆணையத்திற்கும், சிலைமான் காவல் நிலையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

அந்த புகாரில் திருமணப் பத்திரிக்கை, ஆதார் நகல் போன்றவைகளை அனுப்பியிருந்ததால், நடைபெற இருந்த சட்ட விரோதத் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரி வசந்தா கூறுகையில், சட்ட விரோதத் திருமணம் நடைபெற இருந்த தகவல் உண்மைதான்.

எங்களுக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில் அதை விசாரித்தோம். புகாரில் இருந்த தகவல் உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடைபெற இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.