17 வருஷம் நடுக்காட்டில் காருடன் வாழ்ந்து வரும் அதிசிய மனிதர் : வெளியான அதிரவைக்கும் காரணம்!!

636

இந்தியா….

இந்தியாவில், வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் 17 வருடங்களாக காட்டுக்குள் முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் வசித்து வந்தவர் சந்திரசேகர். இவருக்கு சொந்தமாக உள்ள 1.5 ஏக்கர் நிலத்துடன் வசதியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் இவர் சொந்தமாக தொழில் தொடங்க கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாத காரணத்தினால் அவருடைய கார் தவிர அனைத்தையும் வங்கி நிர்வாகிகள் ஜப்தி செய்துள்ளனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சந்திர சேகர் அவரது தங்கை வீட்டில் சில நாட்கள் தங்கினார்.

ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் தன்னுடைய காருடன் அடர்ந்த காட்டிற்குள் தனியாக சுமார் 17 வருடங்கள் வசித்து வருகிறார்.

இதையடுத்து அந்த முதியவர் வங்கியிடமிருந்து தன்னுடைய சொத்துக்களை மீட்பதே தன்னுடைய லட்சியம் என்று கூறியுள்ளார்.