17 வயது மாணவனை காதல் வலையில் வீழ்த்திய ஆசிரியை குறித்து வெளியான அதிர்ச்சி பின்னணி!!

384

திருச்சி…

திருச்சி துறையூரைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் உறவினர்களுடன் சில இடங்களில் தேடி பார்த்துவிட்டு துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவன், அதே பள்ளியில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஷர்மிளா என்ற ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது.

மாணவன் மைனர் என்பதால் நுட்பமாக தேடுதல் வேட்டையை தொடங்கிய போலீசார் ஷர்மிளா மொபைலின் ஐஎம்இஐ நம்பரை கொண்டு டிராக் செய்தனர். அதில், ஷர்மிளா திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிக்கு என மாறி மாறி சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து தேடல் வேட்டையை தொடங்கிய போலீசார் கடைசியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஷர்மிளாவின் தோழி வீட்டில் இருவரும் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். ஷர்மிளாவும், மாணவனின் வீட்டுக்குள் இருப்பதை உறுதி செய்த பின்னர் சடாரென வீட்டுக்குள் நுழைந்து மாணவனை மீட்டனர்.

அப்போது, மாணவன் என் மேல் உயிரையே வைத்துள்ளான். நானும் அவனும் திருமணம் செய்துகொண்டோம் என போலீசாரின் முன்னிலையில் கண் கலங்கி கதறியிருக்கிறார். அதனை அடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியையின் மனநிலையை புரிந்துகொண்டு பக்குவமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

உருகி உருகி இருவரும் காதலித்து வந்த நிலையில் பல தடைகள் வந்தபோதுதான் ‘ வாங்க டீச்சர் ஓடி போய்டலாம்’ என மாணவன் கூறியதாக விசாரணையில் ஷர்மிளா பேச தொடங்கியுள்ளார். ஆசிரியை ஷர்மிளா எம்ஏ, பிஎட், எம்ஃபில் பட்டம் முடித்தவர். 26 வயசாகும் ஷர்மிளா பள்ளியில் படு கண்டிஷனாக இருப்பாராம். ஆனால், மாணவனிடம் மட்டும் அன்பாக இருந்துள்ளார். அடிக்கடி தொட்டு தொட்டு பேசி பள்ளியிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர்.

மாணவனின் பேச்சும், நடவடிக்கையும்தான் என்னை மயக்கிவிட்டதாக கூறும் ஆசிரியை ஷர்மிளா, பள்ளியில் நாங்கள் நெருங்கி பழகுவதை பலர் சுதாரித்து விட்டார்கள் என்பதால் மாணவனுடன் ஓட்டம் பிடித்ததாக கூறினார்.

மாணவன் மீது இருந்த அளவு கடந்த காதலால் அவனை தஞ்சாவூருக்கு அழைத்து கோயிலில் தாலியும் கட்டிக்கொண்டார். கடைசியில் ஆசிரியை மைனர் மாணவனை காதலித்து போக்சோ வழக்கில் சிறையில் உள்ளார். மாணவனுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.