170 க்கு 171 மதிப்பெண் எடுப்பது சாத்தியமே : சொன்னதை செய்துகாட்டிய மகன்!!

529

சொன்னதை செய்துகாட்டிய மகன்

இந்தியாவில் அப்பா சொன்னதைப் போல இருக்கும் மதிப்பெண்ணை விட, அதிக மதிப்பெண் பெற்று இளைஞர், நீங்கள் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன் அப்பா என்று கூறி மதிப்பெண் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி ஐஐடியின் முன்னாள் மாணவரான கர்க், கடந்த 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார். அதன் பின் படிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் மேக்ரோ எகனாமிக்ஸ் படித்துவந்தார்.

இந்நிலையி இவர் அதில் இருக்கும், மூலதன உருவாக்கம் மற்றும் வளர்ச்சி’ என்னும் தேர்வில் 170-க்கு 171 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், என்னுடைய அப்பா, நான் பள்ளியில் படிக்கும்போது தேர்வில் 10-க்கு 10 மதிப்பெண்கள் பெற்றால் போதாது. எப்போதும் 10-க்கு 11 மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.

நான் என்னுடைய மாணவப்பருவத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இதில் இறுதி தேர்வில் நான் 170-க்கு 171 மதிப்பெண் பெற்றிருக்கிறேன். நான் எடுத்த மதிப்பெண்ணை பார்த்து உச்சகட்ட மகிழ்ச்சியாக ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜெப்ரி ப்ராங்கல் இதில் கையெழுத்து போட்டுள்ளார்.

இது உங்களுக்காகத்தான் அப்பா என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் எப்படி 170-க்கு 171 மதிப்பெண் எடுத்தேன் என்பதை அவர் தெளிவாக குறிப்பிடவில்லை. ஜெப்ரி ப்ராங்கல், ஹார்வர்டில் பணியாற்றும் சர்வதேச முன்னணிப் பொருளாதார பேராசிரியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைக் கண்ட பலரும் 170-க்கு 171 மதிப்பெண்ணா அது எப்படி சாத்தியம் என்று ஆச்சரியப்பட்டதுடன், அதற்கான விளக்கத்தை கொடுக்கும் படி கேட்டு வருகின்றனர்.