ராஷ்மிகா மந்தனா..
நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
உலகளவில் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திரை வாழ்க்கையை கன்னடத்தில் இருந்து துவங்கினார் என்பதை அறிவோம்.
அதன்பின் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி கொடுத்து இந்தியஅளவில் பிரபலமானார். தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார்.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா 19 வயதில் ஆடிஷனில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அட நம்ம ராஷ்மிகா மந்தனாவா இது என கேட்டு வருகிறார்கள்.
#RashmikaMandanna‘s first audition at the age of 19! Little did we know this 19-year-old girl would become a pan-India sensation! Pure talent and hard work. 👌 @iamRashmika#Pushpa2TheRule pic.twitter.com/S3603EXTrF
— George 🍿🎥 (@georgeviews) December 22, 2024