2 திருமணங்கள் செய்த ஊழியர் : மன விரக்தியில் நேர்ந்த சோகம்!!

254

நீலகிரி…

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு குமார் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு குமார் சந்திரா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

அவரும் சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் தனது 2 மனைவிகளும் பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.