2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியின் உச்சத்தில் மருத்துவர்கள்? சிசிடிவி காட்சிகளை அழித்தது யார்?

953

ப்ளே ஸ்கூலில் 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை நேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி வருகிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என இங்கிலாந்து தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேயில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாலியல் தொல்லை குறைந்தபாடில்லை. கொத்தாவில் ப்ளே ஸ்கூல் ஒன்றில் இரண்டு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை நேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் இயங்கி வரும் ப்ளே ஸ்கூல் ஒன்றில் 2 வயது சிறுவனை அவரது பெற்றோர் சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி பள்ளிக்கு சென்று வந்த சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதையடுத்து சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பாலியல் தொல்லை நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் இச்சம்பவத்தை மறுத்துள்ளது.

இதற்கிடையே பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் 26ஆம் திகதியில் இருந்து எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது என பெற்றோர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 2 வயது ஆண் குழந்தைக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.