2 பெண்.. 2 ஆண் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

663

கர்நாடக….

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அவருக்கு திடீரென்று ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றுக்குள் 2 ஆண், 2 பெண் என 4 குழந்தைகள் இருந்தைப் பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். தற்போது தாயும், 4 சேய்களும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.