2 வயதில் 45 கிலோ எடை கொண்ட ஆச்சரிய குழந்தை : வெளியான அ திர்ச்சி தகவல்!!

342

டெல்லி…

டெல்லியை சேர்ந்த தம்பதி ஒருவரின் பெண் குழந்தை காயாதி. பிறக்கும்போது இரண்டரை கிலோவாக இருந்த காயாதி, பிறகு ஆறே மாதத்தில் 14 கிலோ ஆனார். அடுத்தடுத்து அவர் உடல் எடை வேகமாக அதிகரித்தது.

இரண்டே வருடத்தில் 45 கிலோவாக எடை அதிகரித்தது. இதனால் அவர் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். குழந்தையை தூக்கிக் கொஞ்சவும் அவர்களால் முடியவில்லை. எடை அதிகரித்ததால், சாப்பாடும் அதிகரித்தது.

அதோடு குழந்தை உடல் நிலையும் மோசமானது. இதனால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.

பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். பின்னர் குழந்தைக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி மருத்துவர் சேத்தி கூறும்போது, ’குழந்தையை காப்பாற்ற அது ஒன்றுதான் வழி என்றதால், அந்த முடிவுக்கு சென்றோம். அறுவைச் சிகிச்சைக்குப் பின் குழந்தை நலமாக இருக்கிறாள்’ என்றார்.