2 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : வெளியான அதிர்ச்சி காரணம்!!

431

திருச்சி…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வீரப்பூர் சேர்ந்தவர் பிரியா என்ற உமாமகேஸ்வரி (25) இவருக்கும் திருச்சி ராம்ஜிநகர் அடுத்துள்ள வண்ணான்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்துரு என்பதுடன் கடந்த மூன்று வருடங்கள் முன்பு திருமணம் ஆனது.

இவர்களுக்கு 2 வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமான முதல் சந்துரு தனது மனைவி மற்றும் தாய் தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

சந்துரு புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். தாய்க்கும் மனைவி உமாமகேஸ்வரிக்கும் இடையே தொடர்ந்து தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று உமாமகேஸ்வரி தனது 2வயது குழந்தைய ரித்திகாவுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த ராம்ஜிநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் முதற்கட்டமாக பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் ஒன்று எழுதி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சிந்துஜா விசாரணை செய்து வருகிறார். சிலப்பதி குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.