20 ஆண்டுகள் டாட்டூ பயன்படுத்தி வரும் விசித்திர மனிதர்: வியக்கவைக்கும் காரணம்!

848

போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயதுள்ள ஆடம் கர்லிகேலின் என்பவர் முகம் முழுவதும் டாட்டுக்களை வரைந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இவர் தனது முகம், உடல், கண் உட்பட அனைத்து இடங்களிலும் அடர் சாம்பல் வண்ணத்தில் டாட்டூக்களை போட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தலை, புருவம், இமை முடிகளுக்கு டை அடித்து வெள்ளையாக மாற்றியுள்ளார்.

இது குறித்து கர்லிகேலின், நான் 20 ஆண்டுகளாக டாட்டூ பயன்படுத்தி வருகிறேன். ஆரம்பத்தில் சில எழுத்துகளைத் தான் எழுதி வைத்திருந்தேன்.

அதன் பின் டாட்டூ மீது ஆர்வம் அதிகரித்து, இன்று என் உடலில் 90% டாட்டூக்களை வரைந்துள்ளேன்.

இன்னும் கூட டாட்டூவை நிறுத்தும் எண்ணம் வரவில்லை. 99% வரை டாட்டூ போடும் திட்டத்தில் இருக்கிறேன்.

என்னுடைய கடினமான காலகட்டங்களை இந்த டாட்டூகளால் தான் எளிதாகக் கடந்து வந்திருக்கிறேன்.

22 வயதில் பெருங்குடலில் புற்றுநோய் வந்து விட்டது. அந்த நோயிலிருந்து மீளவும் கடினமான சிகிச்சையில் இருந்து வெளிவரவும் எனக்குத் துணையாக நின்றது இந்த டாட்டூ தான்.

எனக்கு மன அழுத்தம், சாப்பிடுவதில் குறைபாடு, தற்கொலை எண்ணம் போன்ற அளவிற்கு எண்ணங்கள் வந்திருக்கின்றது.

ஆனால் அவற்றில் இருந்து என்னை மீட்டெடுத்ததும் டாட்டூகள் தான்.

என்னுடைய இந்த டாட்டூ விருப்பத்தை, மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று ஆடம் கர்லிகேலின் கூறியுள்ளார்.