20 ஆண்டுகளாக பெற்ற மகனை சிறிய கூண்டில் அடைத்த கொடூர தந்தை!!

1134

ஜப்பானில் ஊனமுற்ற மகனை சுமார் இருபது வருடத்திற்கு மேலாக சிறிய கூண்டில் அடைத்து வைத்திருந்த தந்தையின் செயல் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் Hyogo பகுதியைச் சேர்ந்தவர் Yoshitane Yamasaki(73), இவர் தன்னுடைய ஊனமுற்ற மகனை சிறிய மர அளவிலான கூண்டில் அடைத்து வைத்துள்ள தாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் அவரது வீட்டை சோதனை மேற்கொண்ட போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஊனமுற்ற நபர் ஒருவர் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் சிறிய மரக் கூண்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.

இதைக் கண்ட பொலிசார் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் Yoshitane Yamasaki-விடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது சில வருடங்களுக்கு முன் இவன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதாகவும், அதனால் பலப் பிரச்சனைகள் எழுவதன் காரணமாகவே அடைத்து வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் பொலிசார் Yoshitane Yamasaki-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், மீட்கப்பட்ட நபருக்கும் 40 வயது இருக்கும் எனவும் அவருடைய உடம்பில் பெரிய அளவிலான காயங்களோ வேறு ஏதேனும் பாதிப்புகளோ இல்லை, இதுகுறித்த முழுமையான விசாரணைக்கு பின்னரே அனைத்தும் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

மேலும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அவர் அந்த கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.

மூன்று அடி நீளம் கொண்ட அந்த கூண்டு, நிமிர்ந்து கூட உட்கார முடியாத அளவிற்கு உள்ளது, ஆனால் பொலிசாரிடம் இது குறித்து கேட்ட போது சரிவர விளக்கம் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.