காசி..
சென்னை பெண் மருத்துவர் உள்பட பல பெண்களிடம் மோசடி செய்த காசி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான ஓட்டி, யோகா மாஸ்டர், தொழிலதிபர் என ஆடம்பரமான, வசதி படைத்த நபர் போல் வேடமணிந்து 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் தான் காசி.
சென்னை, கோவை, பெங்களூரு என பல இடங்களில் கைவரிசை காட்டிய காசி, 10 ஆண்டுகளாக பொலிசில் சிக்கவில்லை.
உள்ளூர் பெண்கள் தொடங்கி, வெளிமாநில பெண்கள் வரை மோ சடி செய்த காசியை, பொலிசார் வலையில் சிக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பல நேரங்களில் தோல்வியில் முடிந்துள்ளன.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் காசி குறித்து புகார் அளித்த நிலையில் பெரும் அழுத்தம் காரணமாக அவனை பொலிசார் கைது செய்தனர். காசி நாகர்கோவில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காசி நீதிமன்றத்துக்கு வந்த போது காவி வேட்டி மற்று நீல நிற சட்டை அணிந்திருந்ததோடு, முகத்தில் மாஸ்கும் அணிந்திருந்தான். அவனை புகைப்படம் எடுத்த போது எந்த பதட்டமும் இன்றி போட்டோகிராபரை பார்த்து காதல் சின்னத்தை காசி காட்டியுள்ளான்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பெரும் குற்றத்தை செய்துவிட்டு முகத்தை கூட மூடாமல் பயமின்றி காதல் சின்னத்தை சிரித்தபடி போஸ் கொடுத்த காசியை இணையதள பயன்பாட்டார்கள் திட்டி வருகின்றனர்.