21 ஆண்டுகளாக தாடியை ஷேவ் செய்யாமல் இருந்த நபர்…. இப்படி ஒரு காரணமா?

1332

சத்தீஸ்கர்….

21 ஆண்டுகளுக்குப் பிறகு நபர் ஒருவர் தாடியை ஷேவ் செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சங்கர் குப்தா என்ற சமூக ஆர்வலரான இவர் “மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புதிய மாவட்டம் உருவாகும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என சபதம் எடுத்துள்ளார்.

இதற்காக, அவர் 21 ஆண்டுகளாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்துள்ளார். மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

இதனைத்தொடர்ந்து, குப்தா முதன்முறையாக கடந்த ஆண்டு தனது தாடியை ஷேவ் செய்துக்கொண்டார். இருந்தாலும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் நடைமுறைக்கு வர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியுள்ளது.

இதனை அறிந்து, குப்தா மீண்டும் ஒரு வருடமாக தாடியை வெட்டவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்க அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். தீர்மானம் நிறைவேறியதும், அவர் தனது தாடியை சவரம் செய்து கொண்டுள்ளார்.