23 வயது பெண் டீச்சரை நடுரோட்டில் பட்டப்பகலில் கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

381

அயர்லாந்….

அயர்லாந்தின் டல்லாமோர் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம் பெண் ஆசிரியை ஆஷ்லிங் மர்பி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

அவரை கடந்த சில நாட்களாக சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர் .அவர்கள் அந்த டீச்சரை கொலை செய்ய திட்டம் தீட்டி இப்படி பின் தொடர்ந்து வந்துள்ளனர் .

அதன் படி அவர் கடந்த புதன்கிழமை மதியத்திற்கு மேல் ஜாகிங் சென்ற போது அந்த மர்ம நபர் அவரை ஆயுதங்களுடன் பின் தொடர்ந்து வந்து ,கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர் .

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் இப்போது 40 வயது நபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.

உடனே அந்த நபருக்கும் குடும்பத்திற்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் குடும்பத்துடன் தலைமறைவானார் . இரண்டு நாட்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அந்த நபர்,

உண்மையில் ஆசிரியயை கொலை வழக்கில் தொடர்புடையவர் அல்ல என விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளதை அடுத்தே விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அவர் தான் குற்றவாளி என சமூக ஊடகங்களில் அவர் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது .