25 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி.. அமலாக்கத்துறை அதிரடி : நடந்தது என்ன?

426

காஞ்சிபுரம்….

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடியும், பாரதிய ஜனதா எஸ்சி பிரிவு மாநில பொருளாளர் மற்றும் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவருமன பி.பி.ஜி.டி சங்கர் பினாமி பெயரில் உள்ள 25 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 சொத்துகளை சென்னை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ரவுடி சங்கர் மற்றும் அவரது பினாமிகளின் 79 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ரவுடி சங்கரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சங்கர். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் , தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் நேற்று துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.