25 முறை வீட்டை விட்டு வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்த மனைவி: ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும் கணவன்… வேதனையில் மாமனார்!!

538

இந்தியா..

இந்தியாவில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்த மனைவியை ஏற்றுக் கொள்ள கணவன் தயாராக இருப்பதாக கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் Nagaon மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக, அந்த பெண்ணின் மாமனார் கூறியுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், மத்திய அசாமின் Dhing Lahkar கிராமத்தில் வாசித்து வரும் பெண்ணிற்கு, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்த நிலையில், இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் கடைசியாக குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆகிறது. இந்நிலையில், தற்போது அந்த பெண் வீட்டை விட்டு வெறொரு நபருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

மருமகள் குறித்து அவருடைய மாமானார் கூறுகையில், திருமணம் முடிந்ததில் இருந்து சுமார் 20-ல் இருந்து 25 முறை அவள் வெவ்வேறு ஆண்களுடன் ஓட்டம் பிடித்துள்ளார். வீட்டை விட்டு ஓடிய சில நாட்களுக்கு பிறகு, ஒவ்வொரு முறையும் திரும்பி வருவாள்.

அவளை அவருடைய கணவர் ஏற்றுக் கொள்வார். அப்படி தான் இந்த முறையும் அந்த பெண் வேறொரு நபருடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

சம்பவ தினமான செப்டம்பர் 4-ஆம் திகதி, டிரைவரான அந்த பெண்ணின் கணவர் வேலை முடிந்து திரும்பிய போது, மனைவி வீட்டில் இல்லை. தன்னுடைய மூன்று மாத குழந்தையை அருகில் உள்ள வீட்டில் கொடுத்துவிட்டு, ஆட்டிற்கு புல் பிடிங்கிவிட்டு வருவதாக கொடுத்துச் சென்றுள்ளார்.

வீட்டின் உள்ளே கணவன் பார்த்த போது, வீட்டில் இருந்த 22,000 ரூபாய் மற்றும் சில தங்க ஆபரணங்களை அவர் எடுத்து மாயமாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அவர் யாருடன் சென்றிருக்கிறார் என்பது தெரியவில்லை, அதே சமயம் அவர் மீண்டும் வந்தால் கணவர் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக, கூறியுள்ளார். மேலும், அந்த பெண் குறித்து அண்டை வீட்டார் கூறுகையில், திருமணத்திற்கு பின் அந்த பெண் பல ஆண்களுடன் முறையற்ற பழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.