தமிழகம்…
தமிழகத்தில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞனை ஊர்கிராமத்தினர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் முப்பத்தி கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. 25 வயது மதிக்கத்தக்க இவர் எம்.ஏ படித்துள்ளார். இவர் பிரபல அரசியல் கட்சி ஒன்றில் மாணவர் அணி நிர்வாகியாக இருக்கிறார்.
இந்நிலையில், இவர் அப்பகுதியில் குளம் மற்றும் ஏரிகளில் குளிக்கும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளான்.
பெண்களிடம் தன்னை ஒரு நல்லவன் போல் காட்டிக் கொள்ளும், இவர் குளிக்க வரும் பெண்களிடம் எவ்வளவு நேரம் குளிப்பீர்கள் என்று கேட்டுவிட்டு, அங்கு ஒரு அழுக்கு துணி வைப்பது போல், அதன் உள்ளே செல்போனை வைத்து படம் பிடிப்படை வழக்கமாக கொண்டுள்ளான்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கூறுகையில், இதற்காகவே அவர் தனி வயர் கூடை ஒன்றை வைத்துள்ளார்.
அதன் பின் குளிக்க வரும் பெண்களிடம் நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு நேரம் குளிக்கிறேங்க, சீக்கிரம் கிளம்புங்க நான் குளிக்கனும் என்று சொல்லிவிட்டு, அந்த கூடையை அங்கே வைத்துவிட்டு சென்றுவிடுவார்.
இதையடுத்து அந்த பெண்கள் சென்ற பின்பு, குறித்த மொபைல் போனை எடுத்து பார்த்து வந்துள்ளான். அந்த வீடியோவை வைத்து குறித்த பெண்களிடம் பாரதிராஜா பணம் கேட்டு மிரட்டியுள்ளான.
அப்படி அவர்கள் பணம் தரமுடியாது என்று சொன்னால், உடனே இந்த வீடியோக்களை எல்லாம் சமூகவலைத்தளங்களில் போட்டுவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளான்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, உடனடியாக பொலிசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவன் செல்போனில் 13 பெண்களின் வீடியோக்கள் இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், என்னை அது போன்று வீடியோ எடுத்து தன்னை மிரட்டி பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளான். அப்படி தான் வரவில்லை என்று கூறினால், உடனே வாட்ஸ் அப் போன்றவற்றி வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுவான். கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை இப்படியே மிரட்டி வந்தான்.
கல்லூரியில் தன்னை ஒரு ஆண்களிடமும் பேசவிடமாட்டான், அப்படி பேசினால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று கூறுவான். ஒரு முறை அப்படி வெளியே சென்ற போது, ஜுஸ் வாங்கிக் கொடுத்து, அதில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, காரில் ஏற்றிச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டான்.
நான் அவனிடம் கதறிய போது, அவன் செல்போனை காண்பித்து, நீ மட்டும் இல்லை, இது போன்ற பல பெண்களிடம் நான் இப்படி இருந்துள்ளேன், இது தான் என்னுடைய தொழில் என்று கூறினான்.
அவனுடைய் வங்கி அக்கவுண்ட்டில் இப்போது வரை 3 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் உள்ளது. இது எல்லாம் பெண்களின் பணம் தான், இதை எல்லாம் மிரட்டி வாங்கியது. தற்போது அவன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே பொள்ளாச்சியில் இது போன்று பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம், ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.